குவைத் நாட்டில் உள்ள National Assembly committee பரிந்துரையின்படி, நாட்டில் உள்ள நீச்சல் குளங்களில் பிகினி உடை அணிந்து குளிக்க பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்களில் குளிப்பதற்கென ஆடை வடிவமைப்புகளை அரசே அமைத்துள்ளது.
மேலும் பொது இடங்களுக்கு பெண்கள் செல்லும்போது இறுக்கமான உடைகளிலோ அல்லது கால்கள் மற்றும் தொடைகள் தெரியும்படியான உடைகளையோ அணியக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. எந்த மாதிரியான உடைகளை அணியக்கூடாது என்பது குறித்த படங்கள் வரைந்து நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கலாசாரத்தை காப்பாற்ற பெண்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் பெண்களுக்கு முதல்முறை எச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படும் என்றும் மீண்டும் அதே தவறை செய்தால் அபராதம் மற்றும் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
















