இங்கிலாந்தின் வித்தியாசமான விளம்பரக்குடும்பம். பிறந்து 10 நாளே ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை நடிகர்கள்.

ad-familyஇங்கிலாந்தில் உள்ள ஒரு குடும்பத்தை அந்நாட்டு மக்கள் விளம்பரக்குடும்பம் என்று பெயர் வைத்துள்ளனர். ஏனெனில் அந்த வீட்டில் வாழும், பெரியவர்கள் முதல் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் பிறந்த பச்சிளங்குழந்தைகள் வரை இருக்கும் அனைவருமே விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த குடும்பத்தின் ஒரு நாளைய வருமானம் சுமார் 1000 இங்கிலாந்து பவுண்டுகள் ஆகும்.

இங்கிலாந்தில் வாழும் அந்தோணி என்பவருக்கு கிம்பர்லே என்ற 31 வயது மனைவி கிம்பர்லே மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே விளம்பரங்களில் தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார்கள். தினசரி வீட்டில் உள்ள ஒருவருக்கோ அல்லது அனைவருக்கும் படப்பிடிப்பு இருக்கும். இங்கிலாந்தின் பல பொருட்களுக்கு இவர்கள்தான் நிரந்தர விளம்பர நடிகர்கள்.

மேலும் அந்தோணி ஜோடிக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் நான்காவது குழந்தை பிறந்தது. அந்த 10 நாள் குழந்தையும் பால்பவுடன் விளம்பரம் ஒன்றிற்கு நடிக்க நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் சம்பளம் நாள் ஒன்றுக்கு 100 பவுண்டுகள் ஆகும். பிறந்த 10 நாட்களிலே அந்த குழந்தை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டதை எண்ணி பெருமைப்படுவதாக அந்தோணி கூறுகிறார்.

இவர்களுடைஅய் ஐந்து வயது டெல்லே மற்றும் மூன்று அயது மாய்சி ஆகியோர் ரெகுலராக படப்பிடிப்புக்கு சென்று வருவார்களாம். இவர்கள் அனைவரும் சேர்ந்தும் பல விளம்பரங்களில்நடித்துள்ளனர். அந்தோணி மனைவி கிம்பர்லே கர்ப்பிணியாக இருக்கும்போதுகூட சில விளம்பரங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பரகுடும்பத்தை பார்த்து இங்கிலாந்து நாடே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

Tags: , ,

Leave a Reply