ஐதராபாத் விமானநிலையத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், விமானப்பயணி ஒருவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல பயணிகள் பிரகாஷ்ராஜினி அடாவடித்தனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை சென்னை செல்லும் விமானத்தில் செல்ல நடிகர் பிரகாஷ்ராஜ் வந்திருந்தார். டிக்கெட் கவுண்டரில் வரிசையில் அவர் நின்றபோது அவருக்கு முன்னால் நின்றிருந்த பயணி ஒருவரின் கை லேசாக பிரகாஷ்ராஜ் மீது பட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த அவர், அந்த பயணியின் சட்டைக்காலரை பிடித்து தாக்க முயற்சித்தார்.
தன்னுடைய கை தெரியாமல் பட்டுவிட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த பயணி கூறியபோதிலும், விடாமல் அந்த பயணியை திட்டிக்கொண்டே இருந்ததால் சக பயணிகள் பிரகாஷ்ராஜை விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இதனால் விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமான நிலைய போலீஸார் வந்து பிரகாஷ்ராஜ் உள்பட பயணிகளை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக எவ்வித புகாரும் வராததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆனாலும் சம்மந்தப்பட்டவர்களை சமாதானப்படுத்தி பிரச்சனை ஏற்படாமல் நிலைமையை சரிசெய்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
















