தமிழ்க் கூட்டமைப்பை அழைக்கவுள்ள ஜெயா?

jayalalitha-campaignஇலங்கைத் தமிழர் விவ­காரம் தொடர் பில் பேசு­வ­தற்­காக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கலாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இலங்கைத் தமி­ழரின் பிரச்­சினை தீர்­வுக்கு இந்­தியா மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தது.

இந்த கடிதம் தமி­ழக முதல்­வ­ருக்கு கிடைக்­கப்­பெற்ற நிலையில், அதற்கு சாத­க­மான பதில் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன்­படி, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை விரைவில் தமது அலு­வ­ல­கத்­துக்கு அழைத்து ஜெய­ல­லிதா பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என்று முத­ல­மைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply