கழுத்தில் ஆறுகிலோ எடையுள்ள கட்டியை சுமந்து வாழ்ந்து வந்த ஒருவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றி மருத்துவர்கள்சாதனை படைத்துள்ளனர்.
Slovakian நாட்டில் கடந்த 2004முதல் கழுத்தில் மிகப்பெரிய கட்டியுடனும், வேதனையுடன் வாழ்ந்த வந்த Stefan Zoleik என்பவருக்கு அந்நாட்டு மருத்துவர்கள் வெற்றிகரமாக சர்ஜரி செய்து 6 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றினர். இந்த சர்ஜரி மூலம் தான் ஜெயிலில் இருந்து விடுதலை பெற்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தனக்கு இந்த கட்டி வந்ததும், தெருவில் போவோர் வருவோர் எல்லாம் என்னை வித்தியாசமாக பார்த்தனர். ஒருகட்டத்தில் என்னை தெருவில் நடக்கவே யாரும் அனுமதிக்கவில்லை. இந்த கட்டியால் நான் அடைந்த வேதனைகளை எடுத்து சொல்லமுடியாத அளவுக்கு அனுபவித்துள்ளேன்.
இறுதியில் Igor Homola, என்ற அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் எனக்கு விடுதலை கிடைத்தது. இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துளேன் என்று கூறியுள்ளார்.
சுமார் ஐந்து மணி நேரம் நடந்த இந்தசர்ஜரி மூலம் ஆறு கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி சாதனை செய்த டாக்டர் Igor Homola,கூறியதாவது இந்த சர்ஜரி சற்று சிரமமானது என்றும் எனக்கு தெரிந்தாலும், Stefan Zoleik அவர்களின் மன உளைச்சலை போக்குவதற்காகவே நாம் இந்த சர்ஜரியை செய்ய ஒப்புக்கொண்டேன் சரிஜரி வெற்றி பெற்றதும் அவருடைய முகத்தில் பார்த்த மகிழ்ச்சிக்கு விலைமதிப்பே இல்லை என்று கூறினார்.
















