இலங்கை குறித்த விசாரணைக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை

navanethem-pillay9இலங்கை குறித்த விசாரணைகளுக்குழு இன்னமும் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழு ஒன்றை நிறுவவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiவின் மார்ச் மாத அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த தீர்மானத்தில் இலங்கை தொடர்பில் விசாரணைக்குழுவொன்றை நிறுவ வேண்டுமெனவும், அந்த அதிகாரத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளருக்கு வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. விசாரணைக்குழுவில் அங்கம் வகிப்போர் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்ட போதிலும், இதுவரையில் உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவுள்ள வழமையான அமர்வுகளின் போது இலங்கை தொடர்பான விசாரணைக்குழு குறித்து நவனீதம்பிள்ளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடாபிலான விசாரணைக்குழு நிறுவப்பட்டதன் பின்னரே அதற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply