13 ஐ முழுமையாக அமுலாக்க அனுமதிக்கமாட்டடோம்: அரசின் பங்காளிக் கட்சிகள் எச்சரிக்கை

13nthஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியிருப்பதைப்போல, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாக இருந்தால் அதனை தாம் கடுமையாக எதிர்ப்பதாக அரசின் பங்காளிக் கட்சிகளான ஜாதிக ஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பன திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

இந்தியாவின் உத்தரவுகளின்படி செயற்படமுற்படுவதால் அரசாங்கம் ஏற்கனவே நெருக்கடியான ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண ஒமல்பே சோபித தேரர், மேலும் அதே பாதையில் செல்வதற்கு அரசாங்கம் முற்பட்டால் மோசமான விவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும் எனவும் எச்சரித்தார்.

இதேவேளையில், இந்த நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பாற்றுவதற்காகவே மக்கள் இந்த அரசாங்கத்தைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் எனத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச, 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தானது எனவும் எச்சரித்தார்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கின்ற போதிலும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் வீரவன்ச குறிப்பிட்டார்.

’13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்தால் அது மிகப்பெரிய தவறாக இருக்கும். மக்கள் அதற்கு ஒரு போதும் அனுமதி வழங்க மாட்டார்கள். அரசாங்கம் அவ்வாறான உறுதியை வழங்கினாலும் அதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம்’ எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply