தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர்களினால் Nமுhடியின் மீது அழுத்தம் செலுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் அமைப்புக்களினாலோ இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது என தெரிவித்துள்ளது.
க்ளோபல் தமிழ் போராம் போன்ற அமைப்புக்களினால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக் கூடிய வகையிலான நடவடிக்கைகளை எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளை முன்னெடு;க்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழக கட்சிகள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. எனினும், இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களினால் புதிய இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
















