தமிழக மீனவர்கள் 25க்கும் மேற்பட்டோர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களின் 6 விசைப்படைகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்ததுள்ளது.
தலைமன்னார் கடற்படை முகாமில் தமிழக மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு சென்ற நிலையில் மீனவரக்ள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா வருவதற்கு முன் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்திருந்தார்.
இதன்படி மீனவர்கள் இந்த வாரம் தமிழகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
















