திருகோணமலை கிண்ணியாவில் 13 கோடி ரூபா இலங்கை பெறுமதியுடைய அமெரிக்க டொலர்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்களிடம் கைப்பற்றப்பட்டுள்ள அமெரிக்க டொலர்கள் போலி நாணயத் தாள்களா என்பது தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்க்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
கைது செய்யப்பட்டுள்ள 6 சந்தேகநபர்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இந்த அமெரிக்க டாலர்கள் போலியானவை அல்ல எனத் தெரியவருவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
















