இந்தியாவில் நடைபெற்ற தேர்தலில் பாரிய வெற்றிபெற்றுள்ள பா.ஜ.க கட்சி, தனிப்பெரும்பாண்மையோடு மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அதன் பொது வேட்பாளரும் குஜராத் மாநில முதல்வருமான நரேந்திர மோடி கடந்த வாரம் இந்தியப் பிரதமராகப் பெறுப்பேற்றுள்ளார். இன் நிலையில், அவர் மீது புலம்பெயர் தமிழர்களால் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாது என்று ஸ்ரீலங்கா அரசு வெளிப்படையாகவே கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது.
பா.ஜ.க கட்சியில் உள்ள முக்கிய நபரான சுஷ்மா சுவராஜ், இலங்கை சென்று மகிந்தரைச் சந்தித்தவராவார். சிங்கள தேசத்தின் நெருங்கிய நண்பர் சுஷ்மா. இன் நிலையில் சுஷ்மாவை நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமித்துள்ளார். இது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இந்தியாவில் மத்தியில் ஆட்சியமைக்க, அங்குள்ள முக்கிய கட்சிகளுக்கு தமிழ் நாட்டின் ஆதரவு வேண்டி இருந்தது.
தமிழ் நாட்டில் உள்ள 40 MP ஆசனங்களே மத்தியில் ஆட்சியை அமைக்க ஏதுவான சக்தியாக இருந்தது. அது தி.மு.கா ஆக இருக்கலாம், இல்லை என்றால் ஆ.தி.மு.கா ஆக இருக்கலாம். இவ்விரு கட்சிகளில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கம் இன்னமும் இருந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க போன்ற கட்சிகளில் ஈழத் தமிழர்கள் தமது ஆதிக்கத்தையோ இல்லை செல்வாக்கையோ செலுத்தமுடியாத நிலை இருந்து வருகிறது. இதனை அடிப்படையாக வைத்தே இலங்கை அரசு ஒரு கணக்கைப் போட்டிருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் புலம்பெயர் தமிழர்கள், மோடி மீது அழுத்தத்தை பிரயோகிக்க முடியாது என்று சிங்கள தேசம் தற்போது கூக்குரலிட்டுவருகிறது.
















