யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் உரிமையாளர் தனது உடல் சுகத்திற்காக யாழ்ப்பாணம் உட்பட்ட பல இடங்களிலும் உள்ள பெண்களை பல வழிகளிலும் வசப்படுத்தி
தனது பாலியல் தேவைக்காகப் பயன்படுத்தி வருவதாகத் தெரியவருகின்றது.
யுத்தம் முடிவடைந்த பின்னர் அவரது திருவிளையாடல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலையில் உள்ள ஆசிரியைகள் இருவர் உட்பட பல பாடசாலை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள், ஆசிரியைகள் உட்பட பலர் இவரால் சீரழிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது பாடசாலை கழகங்களுக்காக நிதி சேகரிக்கச் செல்லும் ஆசிரியைகள் சிலரை இவர் ஆசை வார்தையூட்டியும் பெருமளவு பணத்தைத் தாரை வார்த்தும் தனது பாலியல் தேவையை நிறைவேற்றியுள்ளதாகவும் அத்துடன் இவரது உள்நோக்கம் புரிந்த ஒரு பாடசாலை ஆசிரியை இவரை கடுமையான முறையில் எச்சரித்து தனது பாடசாலை அதிபருக்கும் இதைத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது ஹோட்டலுக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளான பெண்களையும் இவர் விட்டு வைக்கவில்லை.
இவரது கணக்காளராகவும் காரியதரியாகவும் இருந்த குடும்பப் பெண் தனது கணவரைப் பிரியும் நிலைக்கும் இவர் கொண்டு சென்றவராவார்.
குறும்படம் எடுப்பதற்காக அதற்கான விளம்பரத்திற்கான நிதி உதவி பெறச் சென்ற இரு பெண்களை தனது பிரத்தியோக அறைக்கு அழைத்துச் சென்று இரு பெண்களுக்கும் முன்னாலே தனது மடிக்கணனியில் ஆபாசக் காணொளியை அவர்களுக்குக் காண்பித்து இது வெளிநாட்டில் எடுத்த மிகச் சிறந்த குறும்படம்.
ஆனால் இங்கு இதைச் செய்தால் தவறாக கருதுகின்றார்கள் என கூற இரு யுவதிகளும் உடனடியான தலை தெறிக்க வெளியே ஓடி வந்த சம்பவமும் இடம் பெற்றுள்ளது.
இனி மேலும் இவர் தனது திருவிளையாடல்களை நிறுத்தா விட்டால் இவரைப் பற்றிய தகவல்கள் அனைத்துடனும் புகைப்படத்துடனும் நாம் இங்கு பிரசுரிப்போம் என தெரிவித்துக் கொள்கின்றோம்
















