கோவை பூமார்க்கெட் அருகிலுள்ள ஆர்.எஸ்.புரம் தெப்பகுளத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது 45). கூலித் தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (22) சற்று மனநிலை பாதித்தவர். இதற்காக கடந்த 3 மாதங்களாக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் வீட்டில் பிரபாகரன் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த முத்துராஜ் டி.வி.யில் சேனலை மாற்றினார். இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தந்தை முத்துராஜின் காதிலும், முதுகிலும் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த முத்துராஜ் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். முத்துராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
















