Himmatwala படத்தை இயக்கிய இயக்குனர் சாஜித் கான் தற்போது Humshakals என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சயீத் அலிகான், ரித்தீஷ் , பிபாஷா பாசு, தமன்னா, ஈஷா குப்தா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் ஒருசில காட்சிகளில் சயீத் அலிகான் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் ஆகிய இருவரும் பெண் வேடத்தில் நடிக்கின்றனர். இந்த காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சயீப் அலிகானுக்கு பெண் வேடத்திற்கு ஏற்ற உடைகள் மிக எளிதாக கிடைத்துவிட்டன. ஆனால் ரித்தேஷ் முகேஷுக்கு பல கடைகளில் தேடியும் குட்டையான ஸ்கர்ட் கிடைக்கவில்லை. இதனால் இயக்குனர் சாஜித் கான் அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில் ரித்தேஷ் தேஷ்முக் மனைவியும் நடிகையுமான ஜெனிலீயா அணிந்திருந்த ஸ்கர்ட்டை பார்த்ததும் இயக்குனருக்கு மிகவும் பிடித்துவிட்டது. உடனடியாக அவர் ஜெனிலீயாவிடம் அந்த ஸ்கர்ட்டை கேட்டார். ஜெனிலியாவும் மகிழ்ச்சியுடன் தனது கணவருக்காக ஸ்கர்ட்டை கொடுத்து படப்பிடிப்புக்கு உதவி செய்தார். மனைவி ஜெனிலியாவின் ஸ்கர்ட்டை அணிந்து ரித்தேஷ் தேஷ்முக் நடித்த காட்சிகள் பின்னர் படமாக்கப்பட்டது.
















