ஹெரோயின் பாவித்த யாழ் மாணவர் உட்பட இருவர் கைது. அதிர்ச்சி தகவல்!

arrestயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஹெரோயின் போதப்பொருள் பாவித்து வந்த மாணவர் உட்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் ஆவா குழுவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதுடன் ஹேரோயினும் பாவித்து வந்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட மாணவர் இந்த வருடம் இரண்டாவது தடவையாக க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதுபவராவார்.

இவர்கள் வலிகாமம் மேற்கு மற்றும் யாழ் நகர்ப் பகுதிகளில் இடம்பெற்ற சங்கிலித் திருட்டுக்களில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் ஆவாக் குழு எனப்படும் குழுவினருடன் இவர்கள் இருவரும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்ததாகவும் அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் யாழ்ப்பாண பொலிஜசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply