கடலில் மூழ்கி குடும்பஸ்தர் பலி: கொலையா? தற்கொலையா?

deadகடலில் மூழ்கி உயிரிழந்த ஓட்டுத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீனவர்களால் இன்று வென்னப்புவ – கம்மள சுனாமி ஆற்றங்கரைக்கு அருகில் இருந்து குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் னைனாமடம் பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக அவரது மனைவி அடையாளம் காட்டியுள்ளார்.

நேற்றையதினம் வீட்டில் இருந்து சென்ற குறித்த நபரைக் காணவில்லை என அவரது மனைவியால் இன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம் பிரேதப் பரிசோதனைகளுக்காக மாரவில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது கொலையா என்பது தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply