பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்தின் தேவைகள் குறித்து மனு அளிக்க டெல்லி புறப்பட்டுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. இலங்கை அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மோடியின் பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தார் ஜெயலலிதா. ஆனால், டீசல் விலையுயர்வைத் திரும்பப் பெற வேண்டும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் சந்திக்க இருக்கிறார் ஜெயலலிதா. இந்தச் சந்திப்பின் போது காவிரி மேலாண்மை மற்றும் காவிரி ஒழுங்குமுறை ஆணையம் அமைப்பது, தமிழக இலங்கை மீனவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளது. இன்றைய டெல்லி பயணத்தின் போது, பிரதமரை மட்டுமின்றி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரையும் முதலமைச்சர் ஜெயலலிதா சந்தித்துப் பேசவுள்ளார்.
\
















