கடந்த 27ம் திகதி(செவ்வாய்கிழமை) கோட்டபாய ராஜபக்ஷ கல்கிஸை நீதிமன்றில் கூண்டில் ஏறியுள்ளார். கோட்டபாய ராஜபக்ஷ இறந்த லசந்த விக்கிரமதுங்கவுக்கு எதிராக முன்னர் மான நஷ்ட வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
இலங்கை அரசு மிக்- 27 ரக விமானங்களை வாங்கியதில், கோட்டபாய ராஜபக்ஷ பெரும் பணத்தை கமிஷனாகப் பெற்றுக்கொண்டார் என , லசந்த விக்கிரமதுங்க முன்னர் எழுதி இருந்தார். இதன் பின்னரே அவரை இனந்தெரியாத நபர்கள் சுட்டுக்கொன்றார்கள். இது இவ்வாறு இருக்க இந்த வழக்கில் தனது வாக்குமூலத்தை பதிவுசெய்யாது டிமிக்கி கொடுத்துக்கொண்டு இருந்தார் கோட்டபாய.
இறுதியாக நீதிபதியின் கடுமையான உத்தரவுக்கு அமைய, அவர் கடந்த செவ்வாய்கிழமை கல்கிஸை(மவுண்டலவேனியா) நீதிமன்றம் சென்றிருந்தார். இதனை அறிந்த பல ஊடகவியலாளர்கள் அங்கே படையெடுத்திருந்தார்கள். இருப்பினும் அங்கே ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலான பொலிசார் குவிக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் அனைத்து மீடியாக்காரர்களையும் உள்ளே செல்லவிடாது தடுத்துவிட்டார்கள். 27ம் திகதி நடைபெற்ற இந்த வழக்கில், கோட்டபாய ராஜபக்ஷவை குறுக்கு கேள்வி கேட்டவர் எம்.ஏ சுமந்திரன் ஆவார்.
இவரே இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறார் என்பது, குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். சுமந்திரன் குறுக்கு கேள்வி கேட்ப்பதையும் அதற்கு கோட்டபாய பதில் கூறுவதையும் யாரவது படம் எடுத்துவிடக் கூடாது என்பதில் சிங்கள பொலிசார் கண்ணும் கருத்துமாக இருந்துள்ளார்கள். நீதி மன்றத்தினுள் புகைப்படம் எடுக்க முடியாது தான். ஆனால் எவராவது எடுத்திருந்தால் நல்ல விலைக்கு விற்றிருக்கலாம்.
















