சீனாவில் செப்டிக் டேங்க் ஒன்றில் விழுந்த செல்போனை எடுப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களில் அடுத்தடுத்து இரண்டு பேர் பலியாகிவிட்டனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சீனாவில் உள்ள Xinxiang city, என்ற நகரில் வசித்து வந்த ஒரு பெண், தனது £180 மதிப்புள்ள புத்தம் புதிய மொபைல் போன் ஒன்றை கைதவறி செப்டிக் டேங்கில் போட்டுவிட்டார். இதையறிந்த அவரது கணவர் செப்டிக் டேங்கில் இறங்கி செல்போனை எடுக்க முயற்சி செய்தார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பதட்டமடைந்த அந்த பெண் அவரும் இறங்கினார். தாய் மற்றும் தந்தை இருவரையும் காணாமல் பதட்டமடைந்த அவர்களது ஆறுவயது சிறுவனும் செப்டிக் டேங்கில் இறங்கிவிட்டான்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வந்து மூவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். இதில் தாய் மற்றும் ஆறு வயது மகன் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துவிட்டனர். மரணம் அடைந்த பெண்ணின் கணவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உறவினர்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கறையவைப்பதாக இருந்தது.
















