அனிருத் இசையில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் ஒரு தமிழ்ப்பாடல் உள்பட பல பாப் பாடல்களை பாடி இந்திய அளவில் பிரபலம் அடைந்த Yo Yo Honey Singh என்ற பாடகர் இன்று காலை கார் விபத்தில் மரணம் அடைந்ததாக வதந்தி கிளம்பியது. டுவிட்டரில் யாரோ ஒரு மர்ம நபர் புகைப்படத்துடன் Yo Yo Honey Singh மரணம் அடைந்ததாக பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் Yo Yo Honey Singh உடனடியாக தன்னுடைய டுவிட்டர் பக்கத்திற்கு வந்து தனக்கு எவ்வித விபத்தும் ஏற்படவில்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும் டுவிட் செய்த பின்னர்தான் அவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
டுவிட்டர் பதிவில் கார் விபத்தில் பலத்த காயமடைந்து Yo Yo Honey Singh மருத்துவமனையில் மரணம் அடைந்தது போன்ற போலியான புகைப்படத்தை வெளியிட்ட மர்ம நபரை போலீஸார் தேடிவருகின்றனர்.
kaushal chakravarty என்ற பெயரில் வெளிவந்துள்ள இந்த வதந்தியை மும்பையில் இருந்துதான் பரப்பியுள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
















