உதயகலா -தயாபரராஜா மாயாஜால விளையாட்டு: மேலதிக தகவல் வெளியாகியுள்ளது !

srilankan-peopleஉதயகலா மற்றும் அவர் கணவர் தயாபரராஜா என்றாலே, பெரும் சுத்துமாத்து என்பது அனைவரும் அறிந்த விடையம். இவர்கள் இருவரும் சமீபத்தில் கள்ள படகு ஒன்றில் சென்று தமிழகத்தில் கரையொதுங்கினார்கள். இதற்கு முன்னதாக என்ன நடந்தது என்பது தொடர்பாக உங்களுக்கு அறிய ஆவலாக இருக்கும் அல்லவா ? இதோ அந்த விபரங்கள்.

2005ம் ஆண்டு வன்னியில் உள்ள வன்னிரெக் கணனிப் பிரிவில் இணைந்துகொண்டார் தயாபரராஜா. புலிகளின் முக்கிய உறுப்பினரான எழில்வண்ணன் என்பவரின் உதவியுடன் இவர் இணைந்துகொண்டார். இவர் எழில்வண்ணனுடன் சிறுவயதில் ஒன்றாக கல்வி கற்றவர்.

அந்த செல்வாக்கில் தனக்கு வேலை வேண்டும் என்று கெஞ்சிய காரணத்தினால் இருந்த வெற்றிடத்திற்கு ஆள் தேவை என்ற காரணத்தினாலும் சேர்க்கப்பட்டார். நாளாக நாளாக இவர் அங்கும் பல மோசடிகளை செய்வதுடன் கல்விகற்ற சில மாணவிகளுடனும் காதல் லீலைகளில் ஈடுபட்டு பல தடவை எழில்வண்ணனால் எச்சரிக்கப்பட்டார்.

2008ம் ஆண்டு உதயகலா (இவர் ஏற்கனவே ஒரு போராளியின் மனைவி. கணவர் காயப்பட்டு சிகிச்சைக்காக வெளிநாடு சென்றவேளை) இவர் தயாபரராஜாவுடன் தொடர்பினை ஏற்படுத்தினார்.

இவரின் முதல் இரண்டு பிள்ளைகளும் மேற்படி போராளிக்கும் இவருக்கும் பிறந்தவர்கள் என்று கூறப்படுகிறது. தயாபரராஜாவுடன் ஏற்பட்ட தொடர்பினை அடுத்து விடுதலைப் புலிகள் இவரை, சிறையில் அடைத்தார்கள். பின்னர் 2009ம் ஆண்டு வன்னியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டான். இதன் பின்னர் சுதந்திரபுரம் பகுதி ஊடாக இராணுவத்தின் பகுதிக்கு உதயகலாவுடன் தப்பிச்சென்று விடுதலைப்புலிகளுக்கு எதிராக வானொலியில் பேட்டி கொடுத்தார் தயாபரராஜ.

இப்பேட்டி ஒலிபரப்பப்பட்டு சில நாட்களில் தயாபரராஜாவை, கொழும்பில் வைத்து விடுதலைப் புலிகள் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் அதே வானொலிகள் அறிவித்தது. யுத்தம் முடிவடைந்த பின்னர் சில கணினிப்பிரிவு போராளிகளை இவர் காட்டிக்கொடுத்தும் உள்ளார்.

பின்னர் இராணுவத்துடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றி வந்தார்கள். பெரும் மோசடிகளில் ஈடுபட்ட இவர்கள், இறுதியாக சிலரிடம் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவுஸ்திரேலியா செல்லலாம் என்று கூறி பின்னர் அவர்கள் அனைவரையும் தமிழக கடற்கரையில் கொண்டுபோய் விட்டுள்ளார்.

அத்தோடு தமிழகத்தில் தம்மை இலங்கை இராணுவம் அச்சுறுத்துவதாகவும் பேட்டி கொடுத்துள்ளார்கள். இவர்களை கியூ பிரிவு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இவர்கள் மோசடி தொடர்பாக தமிழகத்தில் உள்ள பொலிசாரிடம் யாராவது முறைப்பாடு செய்தால் அவர்கள் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று அறியப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள், தமிழக பொலிசாரை தொடர்புகொள்வது நல்லது.

Tags: , , ,

Leave a Reply