மலேசிய விமானம் MH370 கடலில் எரிந்து விழுவதை கண்ணால் பார்த்தேன். பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்

britain-sailor-MH370பிரிட்டன் பெண் ஒருவர் தனது கணவருடன் இந்திய பெருங்கடலில் படகில் சென்றுகொண்டிருந்த போது விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்து கடலில் விழுந்ததை பார்த்ததாகவும், அந்த விமானம் MH370ஆக இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த 41 வயது பெண் Katherine Tee என்பவர் தனது கணவருடன் உலகை படகில் சுற்றிவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் கடந்த மார்ச் மாதம் இந்தியாவின் கொச்சி பகுதியில் இருந்து தாய்லாந்து நாட்டின் பூகேட் என்ற பகுதியை நோக்கி படகில் சென்றுகொண்டிருந்தபோது, வானத்தில் இருந்து தீப்பிடித்த பொருள் ஒன்று கடலில் விழுவதை பார்த்ததாகவும், அந்த பொருளை முதலில் எரி நட்சத்திரம் என்று நினைத்ததாகவும், ஆனால் கரைக்கு வந்தபின்னர்தான் அது MH370ஆக இருக்கும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடலில் 13மாதங்களாக படகில் சுற்றிவரும் Katherine Tee, கூறிய இந்த தகவல் MH370 மீட்புக்குழுவினர்களை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரிடம் எரிந்த பொருள் விழுந்த இடம் குறித்து தகவல் கேட்டு வருகின்றனர். இந்த தகவல் மூலம் விமானத்தின் பகுதிகள் எதுவும் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Tags: , ,

Leave a Reply