அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த 75 வயது நபர் ஒருவர் மனைவி மட்டன் குழம்பு செய்ய மறுத்ததால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் நியூயார்க்கில் வாழும் பாகிஸ்தானை சேர்ந்த 75 வயது Noor Hussain, என்பவர் சம்பவத்தன்று தனது 66 வயது மனைவி Nazar அவர்களிடம் சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் Nazar மட்டன் குழம்பு வைத்து தர மறுத்ததால் ஆத்திரமடைந்த Noor Hussain, தனது மனைவியின் தலையில் இரும்புப்பொருளை வைத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் Noor Hussain, மனைவி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு வந்த போலீஸார் கணவர் Noor Hussain,ஐ கைது செய்தனர். 20 வருடங்களாக தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை மட்டன் குழம்பிற்காக கொலை செய்த அவருக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார். Nazar இவருக்கு மூன்றாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
















