கடந்த ஞாயிறு அன்று சோனாக்ஷி சின்ஹா தனது 27வது பிறந்தநாளை கொண்டாட ஒரு ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை மும்பையில் ஏற்பாடு செய்திருந்தார். பிறந்தநாள் பார்ட்டிக்கு அவருடன் நடித்த நடிகர்கள் சித்தார்த் மல்ஹோத்ரா, அர்ஜூன் கபூர் , விக்ரமாதித்ய மோத்வானே ஆகியோர் வந்திருந்தனர். ஆனால் பிறந்தநாள் கொண்டாடிய சோனாக்ஷி கபூர் நெடுநேரம் ஆகியும் வரவில்லை. மிகச்சரியாக 12 மணிக்கு கேக் வெட்ட ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்தும் சோனாக்ஷி சின்ஹா வராததால் நடிகர்களிடையே பெரும் பதட்டம் ஏற்பட்டது.
அவருடைய செல்போன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்ததால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் அவருடைய நண்பர்கள் தவித்தனர். பின்னர் பிறந்தநாள் பார்ட்டி கேன்சல் செய்யப்பட்டு அனைவரும் சென்றுவிட்டனர்.சோனாக்ஷி சின்ஹா பிறந்தநாள் பார்ட்டிக்கு வராமல் தன்னுடைய நெருங்கிய பாய்பிரண்டுடன் இரவு முழுவதும் காரிலேயே வெகுதூரம் மும்பைக்கு வெளியே டேட்டிங் சென்று இருவரும் பலமணி நேரம் மனம் விட்டு பேசியதாக மறுநாள் காலையில்தான் அனைவரும் தெரிந்துகொண்டனர். அவருடன் சென்ற பாய்பிரண்ட் சாஹித் கபூர் என்பதை அறிந்ததும் பார்ட்டிக்கு வந்து பலமணிநேரம் காத்திருந்த நடிகர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர்.
இவர் தன் பாய்பிரண்டுடன் ஊர்சுற்றுவதாக இருந்தால் எங்களை எதற்காக பிறந்தநாள் பார்ட்டிக்கு வரச்சொல்ல வேண்டும் என விமர்சனம் செய்ய ஆரம்பித்ததால் அனைவருக்கும் போன் செய்து தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டுள்ளாராம் சோனாக்ஷி சின்ஹா. தற்போது சோனாக்ஷி சின்ஹா ரஜினியுடன் லிங்கா திரைப்படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
















