பிரபல இயக்குனர் சாஜித் கானுடன் டேட்டிங் செல்லும் தமன்னா. விரைவில் திருமணம் செய்ய முடிவு?

tamannah-datingபாலிவுட்டில் Humshakals என்ற திரைப்படத்தில் பிபாஷா பாசுவுக்கு போட்டியாக படுகவர்ச்சியாக நடித்து வரும் தமன்னா அந்த படத்தின் இயக்குனருடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற.

இதற்கு பதிலளித்த தமன்னா, Humshakals என்ற இந்த படம் தனது கேரியரில் மிக முக்கிய படம் என்றும், இந்த படம் வெளிவந்து வெற்றிபெற்றுவிட்டால், பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்துவிடுவேன் என்று பொறாமைப்படும் சிலநடிகர்கள் வயிற்றெரிச்சலில் என்னை பற்றி மோசமான கிசுகிசுக்களை கிளப்பிவிடுவதாக கூறியுள்ளார். மறைமுகமாக பிபாஷா பாசுவை குறிப்பிட்டு கூறும், தமன்னா, Humshakals இயக்குனர் சாஜித் கான், தன்னை ஒரு சகோதரி போல நினைத்து பழகுகிறார் என்றும், ஒரு சகோதரரை எப்படி காதலிக்க முடியும் என்று பதிலளித்துள்ளார்.

மேலும் தான் நடிக்க வந்ததில் இருந்து இதுவரை தன்னை நூற்றுக்கணக்கானோர் காதலை புரபோஸ் செய்துள்ளதாகவும், ஆனால் தனக்கு காதல் மீது நம்பிக்கை இல்லை என்றும், சினிமா ஒன்றே தன்னுடைய வாழ்க்கை என்றும் கூறுகிறார். தமன்னாவின் விளக்கத்திற்கு பிறகும் சாஜித்கான், தமன்னாவை தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் பாலிவுட்டில் வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply