25 இந்திய மீனவர்களும் விடுதலை

srilankan fishersஇலங்கைக்கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 25 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆனந்தி கனகரத்தினம் முன்னிலையில் இன்று காலை முற்படுத்தப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை , எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவர்களை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார். அத்துடன் மீனவர்களுடைய படகு உள்ளிட்ட உபகரணங்கள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து அறிவித்தல் வராத நிலையில் மீனவர்கள் மட்டுமே விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply