கைதாகியுள்ள நந்தகோபன் உதவியோடு 4,000 ஈழத் தமிழர்களது பட்டியலை தயாரிக்கும் இலங்கை அரசு !

nanda-gopan-boosaகடந்த ஏப்பிரல் மாதம் மலேசியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு செல்லும்வேளை, நந்தகோபன் என்னும் நபரை அன் நாடு மீண்டும் மலேசியாவுக்கு நாடு கடத்தியது.

புலிகளின் முன் நாள் உறுப்பினரும், வெளிநாடுகளில் உள்ள பல தமிழர்களோடு தொடர்பில் இருந்தவருமான நந்தகோபனை, மலேசிய அரசு இலங்கைக்கு பின்னர் நாடு கடத்தியது.

அவரே மலேசியாவில் தங்கியிருந்த 3 முன் நாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும் காட்டிக்கொடுத்தார். இவர் தற்போது பூசா முகாமில் உள்ளார்.

இவர் கொடுத்துவரும் தகவலுக்கு அமைவாக புலம்பெயர் நாடுகளில் உள்ள சுமார் 4,000 ஈழத் தமிழர்களது பெயரை இலங்கை அரசு பட்டியலிட்டு வருகிறது என்று கொழும்பில் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இலங்கை அரசு வெளிநாடுகளில் உள்ள 16 அமைப்பை தடைசெய்தது மட்டுமல்லாது 400 தமிழர்களது பெயரையும் வெளியிட்டு, அவர்கள் இலங்கை வரமுடியாது என்றும் அறிவித்தது. அதுபோல தற்போது மேலதிகமாக சுமார் 4,000 பெயர்களை அடங்கிய பட்டியலை அவர்கள் தயாரித்து வருகிறார்கள். அதனை வெகு விரைவில் வெளியிடவும் உள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply