உலக இரத்ததான தினம் 2014; இன்று வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள தாதியர் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

vav-blooddayஇது 11வது சர்வதேச நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது இன்நிகழ்வானது வவுனியா பொது வைத்தியசாலையின் வளாகத்தில் ஆரம்பித்து ஊர்வலமாக வைத்தியசாலை சந்தியை வந்தடைந்து அங்கிருந்து மன்னார் வீதியூடாக வவனியா தாதியர் கல்லூரியை வந்தடைந்தது.

இன்நிகழ்வை வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலமையில் நடைபெற்றறதுடன்,நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை மருத்துவர்களும்,இராணுவ அதிகாரிகளும்,தாதியர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில் குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவியரின் பாண்ட் வாத்திய நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply