நிர்ணவாண யோகா வகுப்புக்கள் தற்போது சில நாடுகளில் பிரபல்யமாகவுள்ளது. இவற்றில்; ஆண், பெண்கள் வேறுபாடின்றி கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் நிர்வாண உடற்பயிற்சியும் ஆரம்பமாகியுள்ளன. டென்மார்க்கின் ஆர்ஹஸ் நகரிலுள்ள ஸ்பார்டன் மென்டாலிட்டி எனும் உடற்பயிற்சி நிறுவனம் அண்மையில் நிர்வாண உடற்பயிற்சி வகுப்புகளை ஆரம்பித்துள்ளன.
இப்பயிற்சி வகுப்பில் 12 ஆண்கள் ஏற்கனவே ஆர்வமாக கலந்துகொண்டுள்ளனர். பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் பயிற்சியின்போது காலுறை மட்டுமே அணிந்துகொள்கிறார்கள். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பரவலாக எதிர்ப்புகள் கிளம்பினாலும் ஆதரிக்கவும் பலர் உள்ளனர்.
இதனால் இப்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்துள்ளன. ஆனால் இது ‘ஏப்ரல் பூல்’ நிகழ்வுக்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு நாடகமாம். இருப்பினும் இணையத்தளங்களினூடாக விரைவாக பரவலைடந்துள்ளது. இதனால் இப்பயிற்சி குறித்து தொடர்ந்தும் பலரும் ஆர்வம் காட்டியபோதிலும் அது ஆபாசமாக இருப்பதாகக் கருதிய நிறுவனம் நிர்வாண வகுப்புகளை கடந்த மாதமே நிறுத்தியுள்ளது. இதேவேளை மேற்படி பயிற்சி நிறுவனத்தினர் பெண்களும் இப்பயிற்சி வகுப்புகளுக்கு கலந்துகொள்வார்கள் என வெகு ஆவலாக எதிர்பார்த்துள்ளனர். இருப்பினும் நிர்வாண வகுப்பு இதுவரையில் பெண்கள் எவரும் கலந்துகொள்ள முன்வரவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
















