இப்போதெல்லாம் இசை வெளியீட்டு விழா மேடையை வாய்ப்பு தேடும் மேடையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிலர். காமெடியுடன் சிரித்துக் கொண்டே அடுத்த படத்திலும் எனக்கு வாய்ப்பு கண்டிப்பா கொடுப்பாரு பாருங்க என்று படத்தின் இயக்குநரை அதிர்ச்சிக்குள்ளாகி அமுர்தாஞ்சன் தடவ வச்சிட்றாங்க சில நடிகர்கள். இதில் லேட்டஸ்டாக இணைந்துள்ளார் நடிகர் ஷாம். இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்த சலீம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் இந்த சான்ஸ் படலம் அரங்கேறியது.
மைக்கை கையில் பிடித்ததுமே எனக்கு இன்னைக்கு ஒரு கனவு வந்தது அதில் பாலா சார் என்னை வைத்துத்தான் படம் இயக்குவேன் என்று அடம்பிடிப்பதுபோல இருந்தது. எழ மனமில்லாமல் எழுந்து அந்த கனவை கலைத்தேன் என்று மறைமுகமாக பாலாவிடம் சான்சை கேட்டுவிட்டார் அவர். அடுத்து பேச வந்த இயக்குநர் பாலா சில தல, தளபதிகளை நடிகர்களை போட்டுத்தாக்கிவிட்டார்.
பாலா பேசியதாவது, என் படத்துல நடிக்கிற ஹிரோ படத்தின் கதாபாத்திரமாக மட்டுமே நடிக்க வேண்டும். கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர்களுடனே நான் படம் பண்ணுவேன். சும்மா வந்து கை, கால ஆட்டிட்டு சீன் போடும் நடிகரோடு நான் என்றைக்குமே படம் பண்ணமாட்டேன் அதுக்கு கோடி ரூபா கொடுத்தாலும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். பாலாவின் அடுத்த படத்தில் ஜெயம் ரவி நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் விரைவில் ஷாமை தன் படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறினார்…
















