மேலாடையின்றி வெளியே வர உரிமை வேண்டும். அமெரிக்க இளம்பெண்கள் நடத்திய டாப்லெஸ் போராட்டம்.

topless-usaதிரைப்படங்களுக்கு சென்சார் இருப்பதுபோல இணையதளத்தில் பதிவு செய்யப்படும் வீடியோக்களுக்கும் சென்சார் கொண்டு வர அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருகிறது. இதனால் ஆபாச மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்தலாம் என அரசு ஆலோசனை செய்து வருகிறது.

ஆனால் இதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த internet censorship என்ற ஆலோசனையை எதிர்த்து இன்று காலை அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள Square Park என்ற இடத்தில் Free The Nipple என்ற அமைப்பை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மேலாடையின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள 37 மாநிலங்களில் மேலாடையின்றி பெண்கள் வெளியே வருவது குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் இருக்கின்றது என்றும் அந்த சட்டத்தை எதிர்த்தும், internet censorship என்ற ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாங்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்துவதாக Free The Nipple என்ற அமைப்பை உருவாக்கிய லீனா என்பவர் தெரிவித்தார்.

தங்கள் போராட்டம் வெற்றி பெறும்வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் கூறிய அவரையும், அவரை சார்ந்தவர்களையும் போலீஸார் கலைந்துபோகும்படி எச்சரித்தனர். போலீஸாரின் எச்சரிக்கைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றாலும், மீண்டும் தங்கள் போராட்டத்தை உரிய நேரத்தில் தொடங்குவோம் என்று Free The Nipple அமைப்பினர் தெரிவித்துள்ளதால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply