ஜனவரியில் அனுஷ்கா திருமணம். தயார் நிலையில் மாப்பிள்ளை மற்றும் மண்டபம்.

anushka-marriage-தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அனுஷ்கா, தற்போது அஜீத் 55, லிங்கா, ருத்ரமாதேவி, பாஹுபாலி ஆகிய நான்கு பிரமாண்டமான படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நான்கு படங்களையும் இந்த வருடத்திற்குள் முடித்துவிட்டு அடுத்த வருட ஆரம்பத்திலேயே திருமணம் செய்துகொள்ள அனுஷ்கா முடிவு செய்துள்ளாராம். அவருடைய பெற்றோர்களும் திருமணத்திற்கு வற்புறுத்தவே அனுஷ்காவும் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டார்.

அனுஷ்காவுக்காக அவருடைய பெற்றோர்கள் டாக்டர், தொழிலதிபர் என மூன்று மாப்பிள்ளைகளை பார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இவர்கள் ஒருவரை அனுஷ்கா வரும் ஜனவரியில் திருமணம் செய்துகொள்வார் என கூறப்படுகிறது.

திருமணத்திற்காக இப்பொழுதே ஐதராபாத்தில் மண்டபத்தை புக் செய்ய ஆரம்பித்துவிட்டனர் அவருடைய பெற்றோர்கள். திருமணத்திற்கு பின்னர் சினிமாவுக்கு அனுஷ்கா முழுக்க போட இருப்பதால், அனுஷ்கா நடித்துக்கொண்டிருக்கும் இந்தநான்கு படங்கள்தான் அவருடைய கடைசி படங்கள் என கோலிவுட் டோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply