செர்பியா நாட்டில் இருந்து கடந்த 2008ஆம் ஆண்டு விடுதலையான Kosovo என்ற நாட்டில் இன்று காலை பவர் ஸ்டேஷன் ஒன்று பயங்கரமாக வெடித்து சிதறியதால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 5 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான Kosovo நாட்டில் இரண்டு மிகப்பெரிய பவர் ஸ்டேஷன் உள்ளது. A மற்றும் B என்று இருபிரிவுகளில் இருக்கும் இந்த இரண்டு பவர்ஸ்டேஷனில் இருந்துதான் நாட்டிற்கு தேவையான 90% மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பவர் ஸ்டேஷனில் ஒன்று வெடித்து சிதறி முற்றிலும் அழிந்து போனதால் அந்நாட்டில் மின்சார தட்டுப்பாடு பெருமளவு இருக்கும் என கூறப்படுகிறது.
பவர் ஸ்டேஷன் வெடித்து சிதறும் சத்தம் கேட்டதும் பூகம்பம்தான் வந்துவிட்டதாக எண்ணி தான் உடனடியாக அந்த ஆலையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், தான் வெளியேறி வந்தவுடன் பவர்ஸ்டேஷனில் இருந்த ஒரு பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது என்றும் அதில் பணிபுரியும் பொறியாளர் ஒருவர் கூறினார். சம்பவ இடத்தை Kosovo பிரதமர் Hashim Thaci, அவர்கள் நேரில் பார்வையிட்டு மீட்புப்பணிகளை துரிதமாக நடைபெற உத்தரவிட்டார். மேலும் Kosovo நாட்டு அமைச்சர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு மீட்பு நடவடிக்கைகளை கவனித்து வருகின்றனர்.
















