பாய்ஸ்,சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்த நடிகை ஜெனிலியா, கடந்த 2012ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டார். தற்போது ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 2003ஆம் ஆண்டு Tujhe Meri Kasam என்ற படத்தில் இணைந்து நடித்த ஜெனிலியா மற்றும் ரித்தீஷ் தேஷ்முக் அதன்பின்னர் பத்து வருடங்களாக காதலித்து இருவீட்டார்களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது தமன்னாவுடன் Humshakals என்ற இந்திப்படத்தில் நடித்து வரும் ரித்தீஷ், தனது மனைவி கர்ப்பமாகியுள்ளதை தனது டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். தங்கள் வீட்டிற்கு புதிதாக வரக்கூடிய தேவதையை இருவரும் பெரிதும் எதிர்நோக்கி காத்திருப்பதாக ரித்தீஷ் தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் இந்த நட்சத்திர ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் வேளையில் தேடிப்பார் இணையதளமும் ஜெனிலியா தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
















