ராஜபக்சக்களிடம் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்பாரா சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க

chandrika-mahidaராஜபக்சக்களிடம் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்பாரா சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க: மீண்டும் பண்டாரநாயக்க அரசியல் சகாப்த்தம் உருவாக்குவாகுமா?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க சிறீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுக்கவிருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தனது தந்தையாரால் 1956களில் உருவாக்கப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகாவோ பண்டாரநாயக்காக்களோ தற்ப்போது எந்தப் பதிவியையும் வகிக்கவில்லை. எனினும் வெளிநாட்டுப் பயணத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இந்த மாத இறுதியில் நாடு திரும்புவிருக்கிறார். நாடு திரும்பியதும் கட்சியைக் காப்பாற்றும் இயக்கத்தை அவர் ஆரம்பிப்பார் எனக் கூறப்படுகிறது.

தற்போதைய சிறீலங்காசுதந்திரக் கட்சியின் தலைமையினால் ஓரங்கட்டப்பட்ட மூத்த பிரமுகர்கள் பலரின் ஆதரவு சந்திரிகாவுக்கு கிடைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது.

1977ஆம் ஆண்டு இலங்கையில் அடித்த ஜே.ஆர் ஜெயவத்தன சுனாமியில் அள்ளுண்டு போன சிறீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்றில் 9 ஆசனங்களுடன் எதிர்க் கட்சி அந்தஸ்த்தையும் இழந்திருந்தது. அப்போது அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியே எதிர்க்ட்சி தலைமையை ஏற்றது. தொடர்ச்சியாக 1994 வரை ஐக்கியதேசியக் கட்சியின் பிடியில் இருந்த ஆட்சியை மீட்டதோடு சிறீலங்கா சுதந்திரக் கட்சியையும் அழிவில் இருந்து தூக்கி நிறுத்திய பெருமை சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவையே சாரும்…

தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் எழுச்சி பெற்ற எஸ் டபிள்யு பண்டாரநாயக்கா வழிவந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசியல் சகாப்த்தம் 1977ல் அடித்த சுனாமியில் அள்ளுண்டு போனதை மீட்டு மீண்டும் பண்டாரநாயக்காக்கள் சகாப்த்தத்தை உருவாக்கிய சந்திரிக்கா 2005ல் எழுச்சி பெற்ற ராஜபக்ஸ அலையில் அடித்துச் செல்லப்பட்டதோடு பண்டாரநாயக்காக்களிடம் இருந்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆதிக்கமும் ராஜபக்ஸக்களின் வசமானது.

இந்த நிலையில் இரண்டாவது அவதாரம் எடுக்க முயலும் சந்திரிக்கா, ராஜபக்சக்களின் ஆதிக்கத்தில் இருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டு மீண்டும் பண்டாரநாயக்காக்களின் சகாப்தத்தை உருவாக்குவாரா என்கதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Tags: , ,

Leave a Reply