பாதுகாப்பு இரகசியங்களை அமைச்சர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்க விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

gotha6பாதுகாப்பு இரகசியங்களை அமைச்சர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்க விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு

நாட்டின் பாதுகாப்பு இரகசியங்களை அமைச்சர்கள் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு விற்பனை செய்வதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆறு அமைச்சர்கள் இவ்வாறு அரசாங்க இரகசியங்களை விற்பனை செய்து விடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் தொடர்பில் உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் அமைச்சரவை விவகாரங்கள் தொடர்பான முக்கிய இரகசிங்களை இந்த அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறை, புத்தளம், மட்டக்களப்பு, கண்டி, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆளும் கட்சி அமைச்சர்களுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இரகசியங்களை அம்பலப்படுத்தியமைக்காக பணம் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் போன்ற சலுகைகளை இந்த அமைசர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு அமைச்சர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் உதவியின்றி சிறிய கார் ஒன்றில் இரகசியமாக சென்று இராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Tags: ,

Leave a Reply