கனடாவில் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் ஹெலிகொப்டரின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளனர். கியூபெக் மாகாணத்தில் இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெலிகொப்டரில் தப்பிச் சென்ற மூவரையும் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மேற்கு பகுதிக்கு அவர்கள் சென்றிருக்க கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை வெளியிடுவதற்கு அதிகாரிகள் தயங்குவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
















