தன்மீது பாலியல் குற்றம்புரிய முற்பட்ட மாமனாரை கத்தியால் குத்தி விட்டு மருமகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் ஒன்று கலகெதர பொலிஸ் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயங்களுக்குள்ளான வயோதிப மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனிமையில் இருந்த மருமகள் மீது அவருடைய மாமனார் பாலியல் குற்றம்புரிய முற்பட்ட போது ஆத்திரம் கொண்ட மருமகள் கத்தியால் குத்தி விட்டு கலகெதர பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரான அப்பெண்ணை வெள்ளிக்கிழமை கண்டி நீதிமன்ற நீதவான் விஜேயசேகர முன்னிலையில் ஆஜர்படுத்திய போது நீதவான் அவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் விசாரணையை எதிர்வரும் அக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
















