அமைச்சர் விமல் வீரவன்ஸ சாப்பாத்துகளை அணிந்த பின்னர் கால்களுக்கு கொஸ்சுகளை அணிய முயற்சிப்பதாக மௌபிம மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியும் அமைச்சர் விமல் வீரவன்ஸவும் நிச்சயிக்கப்பட்ட தனித்தனியான பாதைகளில் பயணம் செய்கின்றனர்.
வீரவன்ஸ, 12 யோசனைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளார். அந்த யோசனைகளுக்கு இணக்கமோ மறுப்போ வெளியிடும் முன்னர், அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளார். காலுறைகளை அணிந்து சாப்பாத்துகளை அணிவதற்கு பதிலாக வீரவன்ஸ, சாப்பாத்துக்களை அணிந்த பின்னர், காலுறைகளை அணிய முயற்சித்து வருகிறார். அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக கூறி சென்ற வீரவன்ஸ, ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்புக்கும் பதிலளிக்கவில்லை.
அப்படியிருந்த அவர், மெதுவாக சென்று ஜனாதிபதியை சந்தித்தார். விமல் வீரவன்ஸ மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஜனாதிபதி அறிந்தே நடத்தப்படும் நாடகம் என சிலர் கூறுகின்றனர். ஜனாதிபதிக்கு வெட்கமில்லை. விமல் வீரவன்ஸவுக்கும் வெட்கமில்லை.
வீரவன்ஸவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பயப்படுகிறார். அரசாங்கத்தில் இருந்து வெளியேற போவதாக விமல் கூறினாலும் அரசாங்கத்தில் இருந்த வெளியேற அவருக்கும் பயம். அரசாங்கம் உடைந்து விழப் போவதை அறிந்து கொண்டவர்கள் தமது இருப்பை பாதுகாத்து கொள்ளவே முயற்சித்து வருகின்றனர் எனவும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
















