78 ‘இந்திய’ மீனவர்களை விடுதலை செய்ய மகிந்த ராஜபக்சே உத்தரவு!

Mahinda-Rajapaksa1இலங்கையால் கைது செய்யப்பட்ட 78 இந்திய மீனவர்களையும் உடனே விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. தமிழக மீனவர்கள் 82 பேரை நேற்று இலங்கை அரசு கைது செய்தது.

இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே சென்னை சிறையில் உள்ள இலங்கை மீனவர்களை தமிழக அரசு விடுதலை செய்தது. இந்த நிலையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ளதாவது: 13 இலங்கை மீனவர்களை இந்தியா இன்று விடுதலை செய்துள்ளதை நான் வரவேற்கிறேன்.

Tags: , ,

Leave a Reply