”பெருமை தகப்பனே குடிப்பதற்கு பால் எங்கே?” கொழும்பில் ஆர்ப்பாட்டம்

strikeஉலகச் சந்தையில் பால்மாவிற்கான வரிச் சலுகை கிடைக்க பெற்ற போதிலும் எமது நாட்டின் அச் சலுகையினை அரசு மக்களுக்கு வழங்காமையினை கண்டித்து இன்று திங்கட்கிழமை கொழும்பு ஹோக்ஸ்ஹோல் வீதியில் அமைந்துள்ள கூட்டுறவு மற்றும் உள்நாட்டு அமைச்சு கட்டிடத்திற்கும் முன்னாள் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தின் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் இணைத்தலைவரும் சட்டத்தரணியுமான சமான்மலி குணசிங்க மற்றும் பெருந்தொகையான உறுப்பினர்கள் பங்குப்பற்றியிருந்தனர்.

இதன் போது கெசினோவுக்கு வரிச்சலுகை குழந்தைகளுக்கு வரிச்சுமையா? பெருமை தகப்பனே குடிப்பதற்கு பால் எங்கே? அரசே ஏமாற்றாதே பால்மாவின் விலையை உடனே குறைத்துவிடு. உலக சந்தையில் பால்மா விலை குறைப்பு நம் நாட்டின் நாளுக்கு நாள் அதிகரிப்பு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டனர்.

Tags: , ,

Leave a Reply