காதலர்களின் மூடநம்பிக்கையால் இடிந்த பிரான்ஸ் நாட்டின் Love Locks பாலம்.

love-locks-bridgeபிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் ஈபிள் டவருக்கு அடுத்தபடியாக சுற்றுலாப்பயணிகள் மிகவும் விரும்பி பார்க்கும் இடம் பாரீஸ் பிரிட்ஜ் என்ற இரும்பிலான பாலம்தான். இந்த பாலத்தில் உள்ள ஒரு பகுதி நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுவதற்கு காதலர்களின் மூட நம்பிக்கையே என்ற செய்தியை கேட்கும்போது உண்மையில் அதிர்ச்சி ஏற்படுகிறது.

பாரீஸ் பிரிட்ஜ் என்ற இந்த பாலத்தை காதலர்கள் Love Locks என்றே அழைப்பார்கள். இந்த பாலத்திற்கு வரும் காதலர்கள், தங்கள் காதல் நீடித்து நிலையாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அவர்கள் சார்பாக இந்த பாலத்தில் ஒரு பூட்டை பூட்டிவிட்டு சாவியை ஆற்றில் எறிந்துவிடுவார்கள். அப்படி செய்தால், காதலர்களுக்கு எவ்வித பிரச்சனையும் வராது என்பது அவர்களுடைய நம்பிக்கை.

நாளடைவில் இந்த செய்தி காதலர்களுக்குள் பரவி நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த இரும்புப்பாலத்தின் மீது பூட்டை பூட்டிவிட்டு செல்ல ஆரம்பித்தனர். பாலத்தின் இரு புறங்களிலும், ஆயிரக்கணகான பூட்டுக்கள் தொங்கி இருக்கும் இந்த காட்சியை பார்ப்பதற்காகவும் பின்னர் சுற்றுலா பயணிகள் குவிய ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த பாலத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த பாலம் இடிந்துவிழுந்த நேரத்தில் ஆற்றில் எவ்வித படகு போக்குவரத்தும் இல்லாததால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இந்த சம்பத்திற்கு பின்னர் இந்த பாலத்தில் பூட்டுக்களை கொண்டு வந்து பூட்ட காதலர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

1804ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இரும்புப்பாலம் இரண்டு உலகப்போர் நடந்தபோதும் கடுமையாக பாதிக்கபட்டது. பின்னர் மீண்டும் இந்த பாலம் பழுதுபார்க்கப்பட்டு 1980ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் Kim Kardashian உள்பட பல ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் பூட்டுக்களை பூட்டி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply