ஹாலிவுட் நடிகை Sandra Bullock அவர்களின் வீட்டில் முகமூடி அணிந்த ஒரு மர்ம மனிதன் நுழைந்ததால் ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த முகமூடி மனிதன் நடிகையிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. தற்போது அந்த மர்ம நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகை Sandra Bullock. இவர் சமீபத்தில் ரிலீஸான கிராவிட்டி என்ற படத்தில் நடித்திருந்தார். இவருடைய வீடு அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ளது. இந்த வீட்டிற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் உள்ளே நுழைந்து நடிகை Sandra Bullock அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் Sandra Bullock, அலறிய சத்தம் கேட்டு அவருடைய உதவியாளர்கள் உடனடியாக ஓடிவந்து மர்ம மனிதனை பிடித்தனர்.
இந்த தகவல் தெரிந்தவுடன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் காவல்துறையினர் விரைந்து வந்து முகமூடி மனிதனை கைது செய்தனர். அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் போல காணப்படுவதால் மருத்துவ பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக நடிகை Sandra Bullock கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அவருடைய வீட்டிற்கு தனியார் நிறுவன செக்யூரிட்டியில் தற்போது காவலுக்கு உள்ளனர்.
















