இலங்கையில் யுத்த வடுக்கள் இன்னும் ஆறவில்லை- நவனீதம்பிள்ளை…..

navanethem-pillay2யுத்தத்தால் ஏற்படுத்தப்பட்ட வடுக்கள் இன்னும் ஆறாத நிலையில் இலங்கை அரசாங்கம் யுத்த நிறைவின் 5வது ஆண்டை கடந்தமாதம் கொண்டாடியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பமாகியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 26வது அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய தமது அலுவலகத்தால், நிபுணர்கள் அடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இது தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்வார்கள் அந்த யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய இலங்கை அரசு ஒத்துழைக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளராகவுள்ள நவனீதம் பிள்ளையின் பதவிக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்தப் பதவிக்கு அடுத்ததாக ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த சயிட் அல் குசேன் பரிந்துரைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: , ,

Leave a Reply