மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லை என இலங்கை அறிவித்துள்ளது.
இலங்கையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என இன்று ஜெனிவாவில் ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் போது, மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை ஆற்றிய உரையினை அடுத்து இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
















