வடக்கு பகுதியில் எங்கு என்ன வேலை செய்தாலும் அங்கு புலனாய்வளர்களின் அச்சுறுத்தலும் பிரசன்னமும் இருக்கும் அந்தவகையில், நேற்று மன்னார் கல்வி வலயத்தில் இடம்பெற்ற சூழலியல் நிகழ்வின் ஒரு கட்டமாக, மாணவர்கள் பாடசாலையில் இருந்து பிரதான வீதிகளினூடாக மன்னார் பெரிய பாலம் வரைக்கும் ஊர்வலமாகச் சென்று கடற்கரையைச் சுத்தப்படுத்தும் சிரமதானத்தில் ஈடுபட்டனர்.
சிரமதானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இராணுவப் புலனாய்வாளர் சிலர் மாணவிகளை வரிசையாக நிற்க வைத்துப் புகைப்படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இது அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அவர், அவர்களைப் புகைப்படங்களை எடுக்கவிடாது தடுத்ததோடு, அவர்களை வற்புறுத்தி அவ்விடத்திலிருந்து அகன்று போகுமாறு அறிவுறுத்தினார்.
















