அமெரிக்காவில் உள்ள ஒருவர் இளம்பெண் ஒருவரை கொலை செய்து அவரை துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கொடூர மனிதர் தற்போது கைது செய்யப்பட்டு ஜெயிலில் உள்ளார்.
அமெரிக்காவின் Coffee County என்ற சொல்லக்கூடிய அமைதியான ஒதுக்குப்புற பகுதியில் தனியாக வாழ்ந்து வந்த Lisa Marie Hyder என்ற பெண்ணை ஒரு மர்ம மனிதன் கொலை செய்து அவரது வீட்டிலேயே அவரை கண்டதுண்டமாகவெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளான். பின்னர் உடலின் மீதி பாகங்களை குப்பைத்தொட்டியில் போட்டுள்ளான்.
Lisa Marie Hyder அவர்களின் அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் குப்பைத்தொட்டியில் பெண் ஒருவரின் பாகங்கள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர்களின் விசாரணையில், அந்த உடல் Lisa Marie Hyder என்பவருடையது என்பதை கண்டுபிடித்து ,பின்னர் Gregory Scott Hale,என்ற 37 வயது நபரை கைது செய்தனர். இவர் அந்த பெண் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரிடம் விசாரணை செய்தபோது இவர்தான் Lisa Marie Hyder என்ற பெண்ணை கொலை செய்ததோடு, துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறினார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல இருப்பதால், இவருக்கு மருத்துவ சோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
















