பிரபல ஹாலிவுட் நடிகர் Richard Gere, எந்த வேடத்தை கொடுத்தாலும், மிக இயல்பாக கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடிப்பதில் வல்லவர். இவர் தற்போது Time out of Mind என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தில் Richard Gere அவர்களுடன் Jena Malone, , Danielle Brooks ஆகியோர்களும் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பிரான்ஸ் நாட்டு இயக்குனர் Oren Moverman அவர்கள் இயக்கி வருகிறார். இந்த படத்தில் Richard Gere பிச்சைக்காரராக நடிக்கின்றார். படத்தில் அவர் பிச்சை எடுக்கும் காட்சிகள் வெகு இயல்பாக வரவேண்டும் என்பதற்காக நியூயார்க் நகரில் உள்ள தெருக்களில் Richard Gere அவர்கள் உண்மையாக பிச்சை எடுத்தார். தூரத்தில் மறைவாக கேமரா வைக்கப்பட்டிருக்க, Richard Gere உண்மையாகவே பிச்சை எடுக்க அவருக்கு ஒருவர் தான் வாங்கி வைத்திருந்த பீட்சாவை பிச்சை போட்டார். இந்த செய்தி மறுநாள் செய்தித்தாளில் வெளிவந்தபோது, பீட்சா கொடுத்த நபர் அதிர்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும் Richard Gere குறித்து ஒரு கூடுதல் தகவல். இவர் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அபோது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அவரது கணவர் முன்னே கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
















