தமிழக பொலிசாரால் விடுதலைசெய்யப்பட்ட மோசடி ராணி உதயகலா… அரசின் சதியா..?

srilankan-peopleஇலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உதயகலா மீது மோசடி குற்றச்சாட்டு ஒன்றை தெரிவிக்க பொலிசாரை நாடியுள்ளார்கள். அவர்கள் தம்மிடம் தற்போது உதயகலா இல்லையென்று தெரிவித்துள்ளார்கள்.

தாம் அவரை கைதுசெய்ததாகவும் பின்னர் பிணையில் விடுவித்துவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளார்கள். இதனால் உதயகலா மீண்டும் இலங்கைக்கு தப்பியோடிவிட்டாரா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இல்லையென்றால், இலங்கை அரசின் ஆதரவில் அவர் தமிழக பொலிசாரால் விடுதலைசெய்யப்பட்டு இருக்கவேண்டும் என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளதாக தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

பல விதமான மோசடிகளைச் செய்து, மோசடிக்கே பச்சடி அரைத்து பூசிய ராணி உதயகலா தமிழகத்தில் இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஈழத்தில் பல தமிழர்களை பலவிதமாக ஏமாற்றி, இறுதியில் சில தமிழர்களிடம் பணம் பெற்று அவர்களை அவுஸ்திரேலியா கூட்டிச் செல்வதாகக் கூறி, தமிழகத்தில் இறக்கிவிட்டார் உதயகலா.

இருப்பினும் இவர் தொடர்பான செய்திகள் வெளியானதை அடுத்து, தமிழக பொலிசார் இவரைக் கைதுசெய்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்தியாவில் வைத்து இவர் எவ்வித குற்றச்செயலையும் செய்யவில்லை. அதனால் அவரை பொலிசார் தொடர்ந்தும் மறியலில் இடமுடியாத நிலை காணப்பட்டது. தற்போது உதயகலா எங்கே இருக்கிறார் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது. இதனைவிட பெரிய விடையம் என்னவென்றால் 5 நிமிடம் கிடைத்தால் கூட அதில் அவர் யாராவது ஒரு தமிழரை ஏமாற்றி விடுவார். ஆகவே அவர் தற்போது யாரை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பது தான் தெரியாத விடையமாக உள்ளது.

Tags: , ,

Leave a Reply