லண்டனில் குடிவரவு அதிகாரிகளினால் (Immigration officers ) பல்வேறு பகுதிகளில் இடம் பெற்ற திடீர் சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் புதன்கிழமை குடிவரவு அதிகாரிகளினால் தமிழர்கள் அதிகம் வாழும் றூட்டிங் (Tooting), குறைடன் (croydon), நீயுமால்டன் (Newmaldon) பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் இந்த சுற்றிவளைப்புச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதில் லண்டனில் வாழ்வதற்கான வதிவிட அனுமதி (Visa) , வேலை செய்வதற்கான அனுமதிகள் (Work Permit) இல்லாது சட்டவிரேதமான முறையில் தங்கியிருந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
















